இந்தோனேசியாவின் இந்து ராணியின் மரபு

ராமாயணம் / மகாபாரதத்தின் இந்திய காவியங்கள் தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை பல இந்தியர்கள் அறிவார்கள். குறிப்பாக இந்தோனேசியாவில், மக்கள் வேறு மதத்தை பின்பற்றினாலும், சமஸ்கிருத பெயர்களை கொண்டுள்ளனர். “தொலைதூர இந்தியா” என்பது மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பண்டைய காலங்களிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்திய தொடர்பைக் குறிக்கப் பயன்படுத்தபடுகிறது.  மேலும் சீனர்களைப் போலல்லாமல் இந்திய கலாச்சாரத்தின் அமைதியான பரவலைக் குறிக்கிறது.

                      பின்னணி வழங்க வேண்டும் என்றால், இந்திய கலாச்சாரம் தென்கிழக்கு ஆசியாவின் பல இடங்களுக்கு நேரடியாக பரவவில்லை. இந்த பகுதிகளில் இந்திய கலாச்சாரத்தை பரப்புவதற்கு மஜபாஹித் பேரரசு முதன்மையான காரணமாக இருந்தது. பாலி, ஜாவா, மலேசியா இன்று சில இந்திய மரபுகளை தக்க வைத்துக் கொண்டுள்ளன . இந்த காலம் இந்தோனேசியாவில் ஒரு பொற்காலம் என்று கருதப்படுகிறது, பின்னர் இந்த பகுதிகளை ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மஜாபஹித் அரச பரம்பரையுடன் ஒரு தொடர்பைக் நிறுவ முயற்சித்தனர்.  

மஜாபஹித் பேரரசின் முடிவு பெறாத பரம்பரை

          ஆனால் மிகவும் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், பேரரசின் பொற்காலம் ஒரு மாவீர ராணியான திரிபுவனா விஜயதுங்கதேவி அல்லது கிதர்ஜாவின் ஆட்சியை குறிக்கிறது. திரிபுவனா ராணி , சக்தி வாய்ந்த பிரதமர்  கஜா மாடா உதவியுடன், பேரரசை பெரிதும் விரிவுபடுத்தினார் மற்றும் வெற்றிகளின் ஒரு பகுதியாக பாலி,  மலேசியா  மற்றும் பல இடங்களில் இந்திய கலாச்சாரத்தை பரப்பினார்.

தென்கிழக்கு இந்தியாவின் வரைபடம் – 1328 ராணி திரிபுவனா அரியணையில் ஏறியபோது

      இந்த கட்டுரை அவரது பாரம்பரியத்தை விவாதிக்கிறது மற்றும் உலகின் இந்திய / இந்திய சாம்ராஜ்யங்களின் வரலாற்றில் மிகப் சிறந்த ராணியாக அவரை நிலைநிறுத்துகிறது .

       ராணி திரிபுவனா, மஜபாஹித் பேரரசை நிறுவிய விஜய  கிருதராஜாச ஜயவர்தனரின் மகள்.   கிருதராஜாச சக்திவாய்ந்த மங்கோலிய பேரரசர் குப்லாய் கானின் படைகளூடன் வெற்றி பெற்று 1294 மற்றும் 1309 இடையே ஆட்சி புரிந்தார். அவர் கிழக்கு ஜாவாவில் சுரபயா அருகே  ட்ரோவுலானை தனது தலைநகராக நிறுவினார்.

கடன்: https://deviantart.com/kenichir0/art/Tribhuwana-Wijayatunggadewi-669484440     

        அவருக்குப் பிறகு, 1309 மற்றும் 1328 க்கு இடையில் பேரரசை ஆண்டது அவரது மகன் ஜெயநகர. 1328 இல் மர்மமான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். அவர் ஒரு வாரிசையும்  விட்டு செல்லவில்லை. அவருக்குப் பின் அவரது தாயார் காயத்ரி (ராஜபத்னி காயத்ரி) அரியனையில் அமர வேண்டும். ஆனால் அவர் அதற்குள் பிக்குனி (புத்த துறவி) ஆகிவிட்டபடியால், அவருக்கு பதிலாக ஜெயநகரவின் அரை சகோதரியாக இருந்த தனது மகள் கிதர்ஜாவை ஆட்சி செய்யும்படி கேட்டார்.

        கிதர்ஜா (அ) திரிபுவனா விஜயதுங்கதேவி அவரது தாயார் காயத்ரி ஆதரவின் கீழ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் (முழு பெயர் – திரிபுவனா துங்கதேவி ஜெயவிஷ்ணுவர்தனி – “விஷ்ணுவின் மகிமை பரவுவும் 3 உலகங்களின் தெய்வம்” என்று அர்த்தம்). அப்போது நடைமுறையில் இருந்ததைப் போல, அவரால் நேரடியாக அரியணையை ஏற முடியவில்லை. 1331 ஆம் ஆண்டில் மத்திய ஜாவாவில் சாடெங் மற்றும் கெட்டா பிராந்தியங்களில் நடந்த கிளர்ச்சிகளை அடக்கி அவர் தனது ஆட்சியைத் தொடங்கினார். இந்த போர்களில் அவர் தனது உறவினர் ஆதித்யவர்மனுடன் சேர்ந்து படைகளை முன்னிறு வழிநடத்தினார்.  

        கிதர்ஜாவின் காலகட்டத்தில் 1328 ஆம் ஆண்டில் மகாபதி (பிரதமருக்கு சமமானவர்) ஆன மற்றொரு பெரிய மனிதரான கஜா மாடாவின் எழுச்சியும் காணப்பட்டது. அதற்கு முன்னர் அவரைப் பற்றி சிறிய வரலாறு அறியப்படுகிறது. 1321 ஆம் ஆண்டில். கஜா மாடா, அப்போது பயங்கரா என்று அழைக்கப்படும் அரச காவலர்களின் தலைவராக இருந்தார் ( பயங்க்கரா என்பது சமஸ்கிருதத்தில் பயத்தைத் தூண்டும் ஒன்று). 1331 ஆம் ஆண்டில், நுசாந்தாரா (தென்கிழக்கு ஆசியா குறிப்பாக இந்தோனேசியா / மலேசியா) கைப்பற்றப்படும் வரை அவர் பாலப்பா உறுதிமொழி எடுத்தார். வரலாற்றாசிரியர்களால் பாலப்பா சத்தியத்திற்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்க பட்டுள்ளது. மிகவும் சாத்தியமான விளக்கம் என்னவென்றால், கஜா மாடா புத்த மதத்தவர். பாலப்பா என்பது ஒரு யோகினியுடன் உடலுறவு கொள்வதற்கான ஒரு புத்த பைரவர் சடங்கு. நுசாந்தராவை வெல்லும் வரை இந்த சடங்கிலிருந்து விலகுவேன் என்று கஜா மாடா உறுதி பூண்டார்.

           கஜா மாடா மற்றும் ஆதித்யவர்மன் ஆகியோரின் உதவியுடன், ராணி திரிபுவனா மஜாபஹித் பேரரசை விரிவு படுத்த தொடங்கினார். கஜா மாடா பெஜெங் இராச்சியம் உட்பட பாலி தீவு மற்றும் லோம்பாக் தீவு முழுவதையும் கைப்பற்றினார் . ஆதித்யவர்மன் புகழ்பெற்ற ஸ்ரீ விஜயா பேரரசு மற்றும் மலாயு அரசை வென்றார். ஆதித்யவர்மன் பின்னர் மஜபாஹித் பேரரரசின் கீழ் சுமத்ராவில் மலையாளபுர மன்னராக ஆனார். கஜா மாடா காளிமந்தனை கைப்பற்றினார். கூடுதலாக, தேமாசெக் (நவீன சிங்கப்பூர்) மற்றும் மலாய் தீபகற்பத்தில் கெடாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றினார். 

       கிதர்ஜாவின் ஆட்சியின் போது, ​​ராமாயணமும் மகாபாரதமும் ஜாவானிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியது, அதன் பின்னர் வயாங் பொம்மை நிகழ்ச்சிகள் மூலம் இயற்றப்படுகின்றன. ராணி சைவ மதம், வைணவம் மற்றும் புத்த மதத்தை பேரரசின் மதங்களாக ஊக்குவித்தார். மஜாபஹித் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதிகள் ஜாவனைசேஷன் அல்லது சமஸ்கிருதமயம் ஆனது. ஜாவாவில் பலர் ஸ்ரீவித்யா அல்லது சுந்தரிபுத்ரி போன்ற சமஸ்கிருத பெயர்களை இன்றும் கொண்டுள்ளனர். இவர்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்.  மஜாபஹித் பேரரசின் கட்டடக்கலை பாணியின் மரபு – கண்டி பெந்தர் என அழைக்கப்படும் பிளவு வாயில்கள் மற்றும் பெலிங்கிஹ் ( மேரு மலையை குறிக்கும் கோபுரம் ) உட்பட இன்று பாலினீஸ் கோவில்களில் காணப்படுகிறது. பாதுரட்ச பாணி நுழைவாயில்கள் மஜாபஹித் பேரரசின் பொதுவான கட்டிடக்கலை. பாதுரக்ஷம் கண்டி பெந்தரைப் போன்றது, ஆனால் மேலே ஒரு கோபுரத்தால் மூடப்படும்.

ராணியின் கீழ் மஜாபஹித் பேரரசின் இராணுவ வலிமை

     வேறுபட்ட சகாப்தத்தின் சோழர்களைப் போலவே, மஜபாஹித் பேரரசும் ஒரு கடற்படையை உருவாக்கியது.  இது தென்கிழக்கு ஆசியாவின் கடல்களில் ஆதிக்கம் செலுத்த உதவியது. குப்லாய் கானின் யுவான் படைகளிடமிருந்து துப்பாக்கி ஏந்திய தொழில்நுட்பத்தை ஜாவானியர்கள் அறிந்து கொண்டனர். மங்கோலிய படையெடுப்பிற்கு முன்னர், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பெரும்பாலும் வில் மற்றும் அம்புகள், ஈட்டிகள் மற்றும் குறுகிய கத்திகள். கஜா மாடாவின் கீழ் ராணியின் படைகள் புதிய சகாப்தத்தில் ஆயுதம் ஏந்தின. அவர்கள் செட்பாங்குகள் என்ற பீரங்கியை உருவாக்கினர். இந்த செட்பாங்குகள் சிறிய கப்பல்களில் ஏற்றப்பட்டு கடற்படை போரில் பயன்படுத்தப்பட்டன. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ராணி மற்றும் பிற அரச குடும்பத்தை பாதுகாக்கும் மஜாபஹித்தின் உயரடுக்குப் படைகள் பயங்கரா என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆயுதங்களில் ஒன்றாக ஆர்க்பஸ்கள் (ஆரம்ப துப்பாக்கிகள்) பயன்படுத்தினர் . ஒப்பீட்டுக்கு, பீரங்கி பெரும்பாலும் இந்தியாவில் 1526இல் முதலாம் பானிபட் போரில் பாபர் பயன்படுத்தினான். இது சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு.  

1350 இல் திரிபுவனா ராணி ஓய்வு பெற்றபோது மஜபாஹித் பேரரசு

ஜாவா பிராந்தியத்தில் நடைமுறையில் உள்ளதைப் போலவே ராணி திரிபுவனா இறந்த பிறகு பார்வதி தேவியாகக் கருதப்பட்டார். ஜகார்த்தாவின் இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் சிலை. Pic cr: குணவன் கர்த்தபிரனாதா

      1350 ஆம் ஆண்டில், பிக்குனியாக மாறிய ராணி தாய், ராஜபத்னி காயத்ரி இறந்தார். திரிபுவனா ராணி ராஜபத்னியின் அனுசரணையில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், ​​அவர் தனது மகன் ராஜசநகரத்திற்கு அரியணையை கைவிட்டு ஓய்வு பெற்றார். அவர் ராணியானபோது சக்ரதாரா என்ற ராஜ குலத்தை சேர்ந்த் ஒருவரை மணந்தார், அவர் மூலமாக  ஹயம் வூரு என்ற  ஒரு மகன் இருந்தார்.  திரிபுவனா ஓய்வு பெற்றபோது, ​​மஜாபஹித் பேரரசின் பிரதேசங்கள் இன்றைய இந்தோனேசியாவுடன் கிட்டத்தட்ட பொருந்தின. இன்றைய மலாய் மற்றும் சிங்கப்பூர் பிராந்தியங்களை ஒருவர் கணக்கில் எடுத்துக் கொண்டால், அது இன்றைய இந்தோனேசியாவின் பிரதேசங்களை விட அதிகமாக இருக்கும். ஹயாம் வுருக் அரியணையில் ஏறியபோது ராஜசநகர என்ற பெயரைப் பெற்றார் . ராஜசநகர ஆட்சி மற்றொரு புகழ்பெற்ற காலமாக ஆனது. மேலும் பேரரசு விரிவடைந்தது . ஓய்வுபெற்ற ராணி தனது மகனால் மத்திய ஜாவாவில் கெதிரியின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.  மற்றும் ராஜாவுக்கு ஆலோசனை வழங்கும் அரச பெரியவர்களின் சபையான பட்டாரா சப்தபிரபுவின் ஒருவராக இருந்தார் .

        அவரது மரணத்திற்குப் பிறகு, அவர் பார்வதி என்ற இந்து தெய்வமாக சித்தரிக்கப் பட்டார். அரச குடும்பத்தாரை இந்து தெய்வங்களாக சித்தரிப்பது இந்த பகுதியின் ஒரு விதிமுறை. ட்ரோவுலனில் உள்ள கண்டி ரிம்பி கோவிலில் அமைந்திருந்த அவரது பார்வதி சிலை ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.

சூர்யா மஜபாஹித்தின் (மஜபாஹித்தின் சின்னம்) சித்தரிப்பு ஒன்பது இந்து தெய்வங்களை ( மேல்) அல்லது எட்டு சூரிய கதிர்களை (கீழே) கொண்டுள்ளது. பாலியில் உள்ள உலுண்டனு பிராடன் கோவிலில் சின்னங்களின் படங்கள்.

முடிவுரை

ஒரு இணை வரைய, திரிபுவனா மற்றும் அவரது மகன், ராஜசநகர, புகழ் பெற்ற தந்தை மற்றும் மகனான   ராஜா ராஜா சோழ மற்றும் ராஜேந்திர சோழ சமமானவர்கள். ராணியின் மரபானது, இன்று நாகரிகம் VI போன்ற வீடியோ கேம்கள் இந்தோனேசிய நாகரிகத்தை வழிநடத்தும் கதாநாயகியாக சித்தரிக்கப் படுகிறார் . இன்று, இந்தோனேசியாவின் கொடி மஜபாஹித் பேரரசின் கொடியின் வண்ணங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாலி தீவில் இன்ற் 90% க்கும் அதிகமான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். சுரபயா அருகே புரோமோ மலையைச் சுற்றி 300,000 தென்கேரீஸ் இன மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் மஜாபஹித் பேரரசின் குடிமக்களின் சந்ததியினர். இவற்றிற்கு காரணம், மரியாதைக்குரிய ராணி திரிபுவனா. இந்த புகழ்பெற்ற அத்தியாயத்தின் மற்றொரு கதாநாயகனான கஜா மாடா,  பல்லவர்களின் துணிச்சலான படைப்பெருந்தலைவர் பரஞ்சோதியை நினைவூட்டுகிறார். 

இந்தோனேசியா இன்று மஜபாஹித் பேரரசின் கொடி வண்ணங்களை தனது சொந்தக் கொடியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இடது: இந்தோனேசியா வலது: மஜாபஹித் படம் cr: விக்கி